அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தாலுகாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அரசு பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பேருந்தின் மேற்கூரை வழியாக […]
