குடிநீர் வினியோகம் செய்யாததால் அதை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏரியில் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஏரி முழுமையாக நிரம்பி இருக்கின்றதால் 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் […]
