தேர்தல் எண்ணிகையில் முறைகேடு நடந்ததாக கூறி 2 கிராமத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சண்முகநல்லூர் மெயின் ரோடு ஓரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமியின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முத்துகிருஷ்ணாபுரம் […]
