மாணவர்களுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சிறுவர்களுக்கு மது வழங்குவதாக அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் மது கடைக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று […]
