100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி […]
