தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத நிறுவனத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொம்மேஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி அமைந்திருக்கிறது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஆட்களை குறைத்துள்ளனர். இந்நிலையில் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையின் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கம்பெனி நிர்வாகத்தை முறையிட்டனர். […]
