தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி பிரச்சினையை முடிக்க வந்த பெண்ணை தாக்கி கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கருக்கை கிராமத்தில் சாரங்கபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் எதிரே இருக்கும் வீட்டின் கதவை தட்டியதாக தெரியவந்துள்ளது. இதில் கோபமடைந்த அந்த வீட்டில் வசிக்கும் தனபால் மற்றும் அவரின் மகன் சதீஷ்குமார் ஆகியோர் சாரங்கபாணியிடம் குடிபோதையில் இரவு […]
