வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளிர் அணி செயலாளர் ஜானகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஐ.டி.ஐ நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கரி சுரங்கம் எதிராக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேவா, சுதாகர், […]
