வேர்க்கடலை பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை – 1 கப் வறுத்த வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 3 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வேர்க்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
