துப்பாக்கியால் 3 மயில்களை சுட்டு வேட்டையாடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழபாண்டி கிராமத்தில் நேற்று அதிகாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம் 3 மயில்கள் இறந்த நிலையில் இருந்தததை கண்ட காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் திருமேனி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முருகேசன், […]
