மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]
