Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார்.! 

காங்கிரஸ் மூத்தத் தலைவர் எம்.வி. ராஜசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார்.  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான எம்.வி. ராஜசேகரன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ராஜசேகரன், கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் இருக்கும் மரலவாடி என்ற கிராமத்தில் 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார். 91 வயதான ராஜசேகரன் கிரிஜா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் கவனிப்பில் இருந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு நீண்டகாலமாக உடல் பிரச்னைகள் […]

Categories
தேசிய செய்திகள்

விடைபெற்றார் வெண்டல் ரோட்ரிக்ஸ் – பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர்..!!

பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ் (59), கோவாவில் நேற்று  காலமானார். மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரும், ஒருபால் ஈர்ப்பாளர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துவருமான வெண்டல் ரோட்ரிக்ஸ், நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் நேற்று காலமானார். வெண்டல் ரோட்ரிக்ஸின் நண்பரான பாஜக எம்.எல்.ஏ. நிலகாந்த் ஹலர்கர் இதனை உறுதி செய்துள்ளார். கோவாவைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ். 2014ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு… திரையுலகினர் அதிர்ச்சி.!!  

‘தவசி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 1983 ஆம் ஆண்டு நடிப்பதற்காக சென்னை வந்து, புரொடக்‌ஷன் மேனேஜராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவருக்கு  கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தி பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அசத்தினார். அவர்  தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள், வேல், இங்கிலிஷ்காரன், நண்பன் ரோஜாக்கூட்டம்   […]

Categories
உலக செய்திகள்

எளிதில் நோயை குணப்படுத்தும்… “344 வயது பெண் ஆமை இறந்தது… ஆனால் சந்தேகம்.!!

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது . ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344  வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக  பார்த்து பராமரிப்பதற்கு  மட்டும்  2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர். இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்.!!

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி காலமானார்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்.  முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர்  ஜெய்பால் ரெட்டி.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயபால் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி  மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருக்கு […]

Categories

Tech |