Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மகாராணியின் உடல்…. எப்போது நல்லடக்கம் செய்யப்படும்….? வெளியான அதிகாரபூர்வ தகவல்….!!!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வந்தார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இதனையடுத்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இளவரசர்களும் குடும்ப உறுப்பினர்களும் அரண்மனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்… இரங்கல்..!!

பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (72) காலமானார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணரும், திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 72. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக இருந்தார் அபிஜித் சென். “இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சோகம்…. பிசிசிஐ முன்னாள் செயலர் அமிதாப் சவுத்ரி காலமானார்.!!

பிசிசிஐ முன்னாள் செயலர் அமிதாப் சவுத்ரி இன்று காலமானார். பிசிசிஐயின் முன்னாள் செயலாளரும், ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஜேஎஸ்சிஏ) தலைவருமான அமிதாப் சவுத்ரி செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. காலையில் சாந்தேவிதா மருத்துவமனைக்கு (Santevita Hospital) கொண்டு வரப்பட்டார். சௌத்ரிக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ராஞ்சியில் உள்ள அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் சவுத்ரி திடீரென மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஸ்மார்ட் ஃபோன் உலகில் கொடிகட்டி பறக்கும்; மிக முக்கிய பிரபலம் காலமானார்!

ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங்  உருவாக்கிய லீ பைங் சல்-ன் மகனும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவருமான  லீ குன் ஹீ (78) இன்று காலை காலமானார். இறப்புக்கான காரணம் அறிவிக்கவில்லை. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு லீ குன் ஹீ அதன் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமைக்கு பின்னர் சாம்சங் தொழில்நுட்ப உலகில் அதீத வளர்ச்சி அடைந்தது. தென்கொரியாவில் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் சாம்சங் மிகப் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்

திமுக எம்.எல்.ஏ ,கே.பி.பி சாமி உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ,  கே.பி.பி.சாமி  (58)   உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. எம்.எல்.ஏ கேபிபி சாமி, 2016  தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு   செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த  எம்.எல்.ஏ கே.பி.பி சாமி 2006- 2011 தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக. மீனவர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார்.  

Categories
Uncategorized மாநில செய்திகள்

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்..!!

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மருத்துவர் கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் காலமானார்..!

மாநில அரசுமருத்துவர் கூட்டமையின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன்சேலத்தில் மாரடைப்பால் காலமானார். தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

Categories

Tech |