மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐவரை போலீசார் கைது செய்ததோடு, கிளி குஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் என்பவரது தலைமையில் சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை […]
