இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான […]
