தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் […]
