மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் […]
