உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சாலையின் அருகாமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மர வியாபாரி என்பதும், மரம் வாங்குவதற்காக காரில் வேலூருக்கு சென்றதும் […]
