குடும்ப வறுமை காரணமாக குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓட்டுனரான ராபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக இந்த தம்பதிகள் தங்களது மூத்த பெண் குழந்தையை மோனிஷாவின் சகோதரியான பிரவீனா என்பவரின் பராமரிப்பில் விட்டுள்ளனர். இதனையடுத்து சட்டவிரோதமாக இந்த தம்பதியினர் திருப்பூர் […]
