தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா […]
