பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் ஆதித்யா (வயது 10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாரதி (வயது 6).. இவர்கள் இருவரும் தன்னுடைய அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றிருக்கின்றனர்.. அப்போது எஸ்.கே.பாளையம் அருகேயுள்ள செங்கல் சூளையில் […]
