அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் […]
