கழிவுநீர் கால்வாயில் தூய்மைப் பணியாளர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தணிகைபோளூர் பகுதியில் சுந்தர்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்குமார் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அருகாமையிலிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு […]
