கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனம் என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk) கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]
