கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. […]
