மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமசாமி வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
