வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் 35,00,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனத்தோட்டக்கழக அலுவலகம் திருச்சி செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அலுவலகத்தின் அறையில் […]
