பண மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அப்பர் சாலையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கு ஹோட்டலுக்கு வந்த காந்தராஜ் மற்றும் அவரின் மனைவி சாய்பிரியா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் தாங்கள் சொந்தமாக கோயம்புத்தூரில் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும், தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், அதில் […]
