வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கொத்தவாசல் பெரிய தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், அவருக்கு அமலி ஜாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் தனக்கு ரேஷன் […]
