ஏ.டி.எம்-யில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் அருகாமையில் இருக்கும் நெடுஞ்சாலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்திருக்கிறது. இதன் அருகாமையில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இதனையடுத்து பாதுகாவலர் இல்லாத காரணத்தினால் இயந்திரத்தை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் தாங்கள் வைத்திருந்த வெல்டிங் மூலமாக பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]
