பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். […]
