சிறுமிய பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். பிறகு 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்குப் பின் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். […]
