பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கார்த்திக் எனும் 11 வயது சிறுவன் பாதியில் வெளியேற்றப்பட்டதற்கு அவனது தந்தை விளக்கம் அளிக்குமாறு அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர். […]
