பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டை காண பாலமேட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டிலும் காணும் பொங்கலான நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கி […]
