டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் […]
