பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சாக்னே மற்றொரு […]
