நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் டேவிட் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் லட்சுமணன் என்பவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டேவிட் மது குடித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் மூன்று பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது டேவிட் தனது வீட்டில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து […]
