பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். யோகா பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். அவரது வயது 99 ஆகும். முதுமையடைந்த நிலையிலும் 50 ஆசனங்களுக்கு மேல் அசால்ட்டாக செய்யக்கூடியவர் நானம்மாள். அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. நானம்மாளின் மாணவர்கள் பல்வேறு நாடுகளில் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். […]
