பழனி முருகனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்ததால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக தளர்வுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, மத வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 […]
