ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. 2005-2006 ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 111 விமானங்களை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாக வழித்தடத்தை வழங்கியதில் பல கோடி அளவிற்கு லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த விதிகளை ஏற்படுத்திய மூத்த […]
