தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]
