ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக ஆக்சிஜன் இருப்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை தரைவழியாக லாரியில் வந்தால் கால தாமதம் […]
