மனைவி கணவரை காப்பாற்றுவதற்காக அவரின் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜனை பரிமாறியும் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் பலர் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்தியாவே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் ரவி சிங்கேல் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி ரேணு […]
