மாநகராட்சி அலுவலகத்திற்குள் காளை மாடு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் காளை மாடு ஒன்று கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கயிறை அறுத்துக் கொண்டு அந்த காளை மாடு சாலையில் வேகமாக ஓடியுள்ளது. அதன்பிறகு அந்த காளை மாடு பாலக்கரை ரவுண்டானா வழியாக ஓடி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலக வளாகத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காளைமாடு ஓடி வருவதை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். அதன்பின் […]
