தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலர் கொட்டாய் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். […]
