ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. […]
