தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக, அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம், எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வரிசையாக வெளியாக உள்ளது. இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 ,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் […]
