சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது , அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற […]
