மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், வர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். […]
