துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தையொட்டி இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொத்தடிமை முறைகளை ஒழிக்கும் பொருட்டு இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புதிய சட்டத்தை இயற்றியுள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கொத்தடிமை ஒழிப்பு முறை நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் கொத்தடிமை முறைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். […]
